Entry: புதிய இணையத்தளம் அறிமுகம் "பெண்ணியம்" Sunday, November 01, 2009
புதிய இணையத்தளம் அறிமுகம் "பெண்ணியம்"
போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனத்துக்குரி...
நாங்கள் இப்போது கூடுதலாகக் கேள்விப் படுவதும், கவலைப்படுவதும் போரால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றித் தான். போரால் பாதிக்கப்பட்ட பெண்களை தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள், திருமணமாகாத பெண்கள், துணையை இழந்த பெண்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவர்களில் ஊனமுற்ற பெண்கள் அதிகம். இவர்களைப் பற்றி நாம் அறிந்துகொண்டது மிகக் குறைந்தளவே.
பெண்களுக்கு இதுதான் பிரச்சினை என்று பொத்தம் பொதுவாகக் கூறிவிட முடியாது. பிரதேச ரீதியாக ஓவ்வொரு பெண்ணினது பிரச்சினையும் வேறுபாடானது. ஆனாலும், போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில், ஏனைய பகுதியைச் சேர்ந்த பெண்களும் கவனம் செலுத்தவேண்டிய அவசரத் தேவையிருக்கின்றது.