|
தன்பால் புணர்ச்சி தண்டனைக்குரிய குற்றமா? Homosexual என்பதற்கு வழக்கமாக எல்லா ஊடகங்களும் ஓரினச் சேர்க்கை’ என்கிற சொல்லாடலையே பயன்படுத்து கின்றன. எனக்கு அதில் உடன்பாடில்லாத நிலையிலேயே ‘Homosexual’ என்பதற்குத் ‘தன்பால் புணர்ச்சி’ என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளேன். ஆங்கிலத்தில் இயல்பான ஆண் - பெண் உறவை ‘Heterasexual’ என்கின்றனர். இதை எதிர்பால் புணர்ச்சி எனத் தமிழ்ப்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண், ஆண்-பெண் இரு பாலரோடும், ஒரு பெண், பெண்-ஆண் இரு பாலரோடும் உறவு கொள்வதை ஆங்கிலத்தில் ‘Bisexual’ என்கின்றனர். இதைத் தமிழில் இருபால் புணர்ச்சி எனலாம். இதை இருபால் புணர்ச்சி என்றால் மேலே குறிப்பிட்ட எதிர்பால் புணர்ச்சியான Heterasexual தான் #39;ருபால் புணர்ச்சி எனக் குறிப்பிட வேண்டும். எனவேதான், Hetera எதிர்பால், Homo தன்பால், Bisexual இருபால் என்கிற பொருளில் தன்பால் புணர்ச்சி என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளேன்.
தன்பால் புணர்ச்சியைத் தண்டனைக்குரிய குற்றச் செயலாக ஆக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்கம் செய் யக் கோரி தொடரப் பட்ட ஒரு வழக்கில் அதை ஏற்று “18 வயது நிரம்பிய ஆணோ பெண்ணோ தன்னுடைய வாழ்க் கைத் துணையாக மற் றொரு ஆணையோ, பெண்ணையோ திருமணம ் செய்து கொள்வதும்]]> , கணவன் மனைவியாக வாழ்வ தும் தவறல்ல. அதைத் தடை செய்யும் இ.த.ச. 377 பிரிவுதான் அரசியல் சட்டத்துக்கு முரணானது” என்று கடந்த 02-07-09 அன்று தில்லி உயர் நீதிமன்றம் #39;ரு பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் ஏ.பி.ஷா,எஸ். முரளிதரன் ஆகியோர் இத்தீர்ப்பை வழங் கினர். இதற்கு நாடு முழுவதும் ஆதர வாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் எழும்ப தில்லியைச் சார்ந்த சோதிடர் சுரேஷ்குமார் கௌசல் என்பார், “இத் தீர்ப்பு முறைகேடுகளுக்கு வழி வகுக் கும். எனவே தில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்புக்குத் தடை வித ிக்கவும் அதை ரத்து செய்யவும் வேண்டும்” எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி பி. சதாசிவம் ஆகியோர் அடங்கிய ஆயம் தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்து இந்தப் பிரச்சினையில் அரசின் நிலையைத் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவிக்கை அனுப்பி வரும் ஏப்ரல் 14-க்கு வழக்கை #39;த்தி வைத்துள்ளது. அரசு தரப்பிலும் தில்லி உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கு ஆட்சேபம் ஏதும் பெரிதாக இருக்காது. பெரும்பாலும் இதில் ஒத்த கருத்தே நிலவுகிறது என்கிற சூழலில் நாடு முழுவதும் பழமை வாதிகளும், மத அடிப்படைவாதிகளும் மட்டும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில் இந்த வழக்கின் பின் னணிகளையும், அது சார்ந்த நியாயங்களை யும், சனநாயக மற்றும் மனித உரிமை நோக்கில் ஆராய வேண்டியது அவ சியமாகிறது. காதல் என்பது எதிர்பால் ஈர்ப்பாகவும், எதிர்பால் புணர்ச்சியாக வும் அமைவதே பொது வில் இயல்பானதும் இயற்கையானதுமாக இருந்து வரு கிறது. எனில் சில குறிப்பான வாழ்க் கைச் சூழலில், குறிப்பான உணர்வு நிலைகளில் அரிதாகச் சிலர் மத்தியில் இது ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்குப் பெண்ணோ ஆன தன்பால் ஈர்ப் பாகவும், தன்பால் புணர்ச்சியாகவும் அமைந்து விடுகிறது. இதனால் இது இயல்புக்கும் இயற்கைக்கும் மாறான தாகக் கருதப்படும் அதே வேளை குற்றச் செயலாகவும் ஆக்கப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 இப்படிக் கூறுகிறது. “இயற்கை நியதிக்கு மாறாகத் தன் விருப்பத்துடன் #39;ரு ஆண், பெண் தன் பாலினருடன் அல்லது விலங்குடன் உடலின்பம் சார்ந்த உறவு கொள்ளும் எவரும் வாழ்நாள் அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை மற்றும் அபராதத்திற்கான தண்டனைக் குரியவராவார்.” தொடர்ந்து வாசிக்க |
| Leave a Comment: |