A TAMIL E-ZINE FOR WOMEN'S WRITINGS, ARTS & LITERATURE - OODARU
Best Viewed on Internet Explorer

font type:
tamil unicode

published on
2005 June

editors:
ranji(swiss)
deva(germany)

email:
udaru@bluewin.ch



make a comment

உங்கள் பதிவை தமிழ் யுனிகோட் இல் எழுதிக்கொள்ளுங்கள். நன்றி.

எழுத்துருமாற்றி
நன்றி: சுரதா.கொம்


Monday, October 26, 2009
இணையத்தள அறிமுகம்

புகலிடச் சிந்தனை மையம்

இணையத்தள அறிமுகம்

1980 களில் புரட்சிகர பிரிவுகள் நடத்திய அரசியல் போராட்டத்தினதும், 1990 களில் புலத்தில் உருவான சிறு சஞ்சிகைகளைச் சுற்றி நிலவிய புரட்சிகர கூறையும், இதன்பின் நிலவிய தனிமனித புரட்சிகர சிந்தனையினையும் உள்வாங்கி “புகலிடச் சிந்தனை மையம்” என்ற அமைப்பு புலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.


இது தான் கொண்டுள்ள திட்டத்தின் அடிப்படையில், இதற்கு வெளியில் உள்ளவர்களை ஒருங்கிணைக்க முனைகின்றது. தனக்கான ஒரு இணையத்தை,உங்கள் முன் அது அறிமுகம் செய்கின்றது.

http://www.psminaiyam.com

மக்கள் நலனை முன்னிறுத்தி, மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் இனங்காட்டி போராட வேண்டிய தேவையிருக்கிறது. தமிழ்மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள இன்றைய நிலையைப் பயன்படுத்தி அல்லது அதற்குள் பலியாகி எழத் தொடங்கியிருக்கும் மக்கள் நலன்சாராத கருத்துநிலைகளுள் தலையீடு செய்யவேண்டிய தேவை இன்னும் அதிகமாகியிருக்கிறது.

அதாவது மக்கள் நலனை முன்னிறுத்திய ஐக்கியத்தையும், மக்கள் விரோதக் கூறுகளுக்கு எதிரான போராட்டத்தையும் “புகலிடச் சிந்தனை மையம்” கோருகின்றது. இதற்கு உங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் அது எதிர்பார்க்கிறது.

- புகலிடச் சிந்தனை மையம்

26.10.2009

 

comments  

Sunday, October 25, 2009
US war crimes report adds to pressure on Sri Lanka

US war crimes report adds to pressure on Sri Lanka

US war crimes report adds to pressure on Sri Lanka

 The office of the UN human rights chief renewed its call Friday for a probe into alleged war crimes committed by Sri Lankan troops and Tamil rebels during the final stages of the country's civil war.

"We still believe that something like the Gaza fact-finding mission is certainly warranted given the widespread concerns about the conduct of the war in Sri Lanka," said Rupert Colville, a spokesman for UN High Commissioner for Human Rights Navi Pillay.

Colville was referring to the controversial probe by former international war crimes prosecutor Richard Goldstone into the recent conflict between Israel and the Palestinians in the Gaza Strip.

Goldstone's fact-finding mission was set up by a vote in the 47 member state UN Human Rights Council, which has so far not taken up the Sri Lankan issue.

The United States on Thursday urged Sri Lanka to probe allegations of war crimes committed by government troops and Tamil Tiger rebels towards the of their decades-old conflict earlier this year.

The call followed publication of a US State Department report that contained claims of atrocities committed by both sides.

Colville underlined that the US report did not constitute the necessary full inquiry but he acknowledged that it "catalogues in quite some detail specific events that have been reported."

"It seems that more clarity is likely to emerge about who did what to whom and whether or not war crimes and crimes against humanity and other very serious war crimes were committed by one or both sides," he added.

The UN human rights office also urged the Sri Lankan government to honour pledges that it would allow displaced Tamils out of government-run camps and seek to reduce discrimination against the Tamil minority.

"The issue of some 240,000 - 250,000 displaced people living in what are in effect internment camps continues to be of great concern," said Colville.

"We hope the government takes serious actions to fulfill these commitments in the very near future," he added.

Sri Lanka's ultra-nationalist government has so far rejected calls for a war crimes probe.


Thanks JDS

comments  

Friday, October 23, 2009
இலங்கை இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம்

 இலங்கை இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம்

இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட
உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில்
சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கபட்டுள்ள இந்த உடலங்கள்...கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில்...

 

 

comments  

Thursday, October 22, 2009
28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு...

28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு...

 28 வது  பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு...

ஐரோப்பா, லண்டன்  சுவிஸ் ஆகிய இடங்களில் தொடர்ந்து  நடைபெற்று வருகின்ற  புகலிடப் பெண்கள் சந்திப்பின் 28வது தொடர் ஒக்ரோபர் 10ஆம் திகதி சுவிஸ் உஸ்ணாக்கில் நடைபெற்றது. 

 புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பெண்கள், படைப்பாளிகள், பெண்ணியவாதிகள்,  ஓவியைகள் என  ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்து பெண்கள்  பங்கு பற்றினார்கள்.  றஞ்சி, தில்லை, நளாயினி, பிரபா ஆகியோரின்  ஒருங்கிணைப்பில் இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றது. 4 வது தடவையாக சுவிஸில் நடைபெறும் பெண்கள் சந்திப்பு பற்றி குறிப்பிட்டு   றஞ்சி வரவேற்புரையை நிகழ்த்தினார். சுயஅறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலண்டனிலிருந்து வருகை தந்திருந்த ஓவியை அருந்ததியின் ஓவியங்கள் சிலவும், கவிதைகள் சிலவும்  மண்டபத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன அவற்றில் நம் ஊர்த் திண்ணையின் பயன்பாட்டைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்த   ஓவியங்கள் அங்கு வந்திருந்த பெண்களின் கவனத்தைப் பெற்றதோடு அப் பெண்களின் பழைய நினைவுகளையும் மீட்டன.


(என் மதிந்த வயிற்றின் மேல்
கை வைத்து உன்னை
உணர்ந்து பார்க்கையில் - நான்
என்னை மறப்பேன் - உன்
ஒவ்வொரு அசைவும் எனக்குப் பாடம்

காலையில் கை அசைப்பதும்
மதியம் படுத்துறங்குவதும்
மாலையில் குட்டிக்கரணம் போடுவதுமாய்- நீ
என் கருவறையில் அடிக்கும் லூட்டிகள்
ஆயிரம்... ஆயிரம் - அந்த
பத்து மாதங்கள்
எனக்கும் உனக்குமான
பிரத்தியேக கணங்கள்-
எமை
பிரிக்க முடியாப் பொழுகள்
ஒரு நாள்,
நீ ஓ என கத்திக்கொண்டு
வெளியில் வருவாய்!
அந்தப் பொழுதுக்காய்
நான் காத்திருப்பேன்.)
(அருந்ததி லண்டன்)

(மண்டபத்தில் தொங்கிய ஓவியங்களில் ஒன்றும் கவிதையும் )

28வது தொடரின் முதலாவது நிகழ்வை உச்ணாக் மாவட்ட பிறமொழித் தாய்மாருக்கான பெண்கள் அமைப்பின் தலைவி எரிக்கா மாயர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
 

சுவிஸிலுள்ள பிறமொழித் தாய்மார்களின் வாழ்வியல் மீதான தகவல்களை அறியத் தந்ததோடு இவ்வாறான தாய்மார்கள் எதிர்கொள்ளும் மொழிரீதியான  சிக்கல்களையும் பாலியல் ரீதியான பிரச்சினைகளையும் அதே நேரம் கலாச்சார ரீதியாக அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளையும் எடுத்துக் கூறினார். சுவிஸ்; அரசாங்கம்   வெளிநாட்டு தாய்மார்களுக்கு உதவி புரியவும் அவர்கள்  இந்நாட்டில் வாழ்வதால் டொச் மொழியை கற்றுக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும் என்றும் அதனால் அவர்களும் அவர்கள் குழந்தைகளும் பயனடைவார்கள் என்றும் அதற்காக தாங்கள்  பல உதவிகளை செய்ய காத்திருப்பதாகவும் அதற்கு   intergration    என்ற  அமைப்பின் மூலம் சுவிஸ்; அரசாங்கம்  பல  செயற்திட்டங்களையும் ஆரம்பித்திருப்பதாகவும் எடுத்துச் சொன்னதோடு  அதற்கு பெண்கள் சந்திப்பு உதவ முடிந்தால் அதை தான் வரவேற்பதாகவும் கூறினார்.  அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட பெண்கள்  தமது கருத்துக்களை   எரிக்கா மாயருடன் பகிர்ந்து கொண்டனர்  அவரின் உரையை யேர்மனியிலிருந்து வந்திருந்த தேவா மொழிபெயாத்திருந்தார்.

அடுத்த நிகழ்வாக  யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பெண்களும் அபிவிருத்தியும் என்ற நிறுவனத்தின் நிலையப் பொறுப்பாளர்   சரோஜா சிவச்சந்திரன்  இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் பாதிப்புகளும், விளைவுகளும், பெண்களின் எதிர்காலமும் என்ற தலைப்பிலும், வடக்கு கிழக்கு பெண்களின் இன்றைய நிலவரம் பற்றியும் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த யுத்தத்தால் ஏற்பட்டுள்ள இடப்பெயர்வுகள் முழச் சமூகத்தையுமே பாதிப்புக்குளாக்கியுள்ளது. மீண்டும் சென்று வாழ முடியாமல் நிலங்களும் தரைகளும் கண்ணி வெடிகளால் நிறைந்துள்ளன இந்த கொடிய யுத்தத்தால்  குடும்பத்தின் பல அங்கத்தவர்களை இழந்துள்ளோம். அங்கவீனர்களாகியுள்ளோம். பல பெண்கள் கணவனையிழந்து, வாழ்வையிழந்து, குழந்தைகளையிழந்து மன நோயாளிகளாக உள்ளனர். அழிந்து செல்லும் எமது சமூகத்தை அழிவில் இருந்து பாதுகாக்க நாம் விரும்புகிறோம். முற்றும் முழுதாக போரினாலும், முகாம்களிலும் அதே நேரம்  பொருளாதார பலமிழந்த நிலையிலும் பிள்ளைகளின், பெண்களின் எதிர்காலம் அடைபட்டே உள்ளன.

இவ்வாறு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் இழப்பின் துயர்களை சந்தித்துள்ளனர்.  எதை நாம் கூறுவது ஆழமான எங்கள் வலிகளின் கோடுகள் இவை.  மனித உரிமைகள் மறுக்கபடாமல் எமது மொழிக்கான உரிமையும் மனித உறவுகளுக்கான மதிப்பும் பயம் இல்லாது வாழும் சூழல் போன்றவை முக்கியமானது. பெண்களின் சுயாதீனமான வாழ்க்கையை இல்லாதொழிக்கும் ஒரு கருவியாகவே இந்த யுத்தம் தொடர்ந்துள்ளது. சிறுமியர் நிலைகளை மேலும் நோக்கின் குடும்பத்தில் பெற்றோரை இழந்த சிறுமியர் குடும்பத்தின் சுமைகளை சுமக்க வேண்டியவராகின்றனர். இதனால் பெரும்பான்;மையான பெண் சிறுமியரின் கல்வி நிலை பாதிக்கப் படுகின்றது. இச் சிறுமியர் தனக்கு கீழ் உள்ள தம்பி தங்கையரை பராமரிக்க வேண்டியுள்ளதால் இடைநடுவில் கல்வியை இழக்கின்றனர். வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். பிரச்சினைகள் அரசியல் நோக்கில் அணுகப்படுவதால் ஆண்களது இயல்பான சவால் அணுகுமுறை பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக வலுப்படுத்துவதாகவும், விரிவுபடுத்துவதாகவும் காணப்படுகிறது. பொருளாதார நிலையில் நின்று பார்ப்பின் யதார்த்தத்தின் பயங்கரத்தை புரிந்துகொள்ள முடியும்.

அதுவும் பெண்நிலை நோக்கிலான பொருளாதார அணுகுமுறை முக்கியம் தொடர்ச்சியான இழப்புக்களை எவராலும் எதிர் கொண்டு வாழ்வது என்பது முடியாத காரியம் வடக்கு கிழக்கு பெண்களின் வாழ்நிலை கணவனையிழந்த பெண்களின் வாழ்நிலை என்பன இன்று பேசப்படாத பொருளாகி விட்டன. நாம் எம்மால் இயன்ற உதவிகைள இப் பெண்களுக்கு செய்ய முன் வரவேண்டும். பொருளாதார ரீதியாக இவற்றை நாம் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார். சரோஜா சிவச்சந்திரனின் நிகழ்வுக்கு தில்லை தலைமை தாங்கினார்.


இந் நிகழ்வைத் தொடர்ந்து நந்தினி தலைமையில் இடம்பெற்ற அமர்வில்

பிரான்சிலிருந்து வருகை தந்திருந்த பெண்ணியச் செயற்பாட்டாளர் பரிமளா வாடகைக்கு விடப்படும் கருவறைகள்  என்ற தலைப்பின் கீழ் தனது கருத்தை முன்வைத்தார். இந்தியா உலகக் குழந்தைகளை தனது நாட்டில் உற்பத்தி செய்வதில் முன்னேறி வருகிறது. ((Baby made in india )  பெண்கள் மீதான சுரண்டலின்  இன்னொரு வடிவம் தான் பெண்களின் கருவறைகள் வாடகைக்கு விடப்படும் பிரச்சினை.  இன்று பெண்கள் மேலான சுரண்டல் அவர்களுடைய கருவறைகளை அவர்களுடைய கணவன்மார்களே வாடகைக்கு விடும் அவலம்.

வெளிநாடுகளில் பரவலாகவும்  உள் நாடுகளில் ரகசியமாகவும்  செயற்கை முறையில் குழந்தை உருவாக்குவதில் எண்ணற்ற வெளிநாட்டவர்கள் வந்து இந்தியாவில் குவிகிறார்கள். இணையம் மூலமாகவும் வாடகை கருவறைகள் பேரம் பேசப்படுகின்றன. ஒரு குழந்தையை உருவாக்குவது பல சிக்கல் உடையது.  ஓரினச் சேர்க்கை தம்பதிகளை இப்பிரச்சினையிலிருந்து  தவிர்த்து விடுகின்றனர். வாடகைத்தாயின் கருவறையில் வளரும் அக் குழந்தையின் மரபணுக்களும் இரத்தமும் பெற்றோரை சார்ந்தது. (விந்தையும் கரு முட்டையையும் கொடுத்தவர்களின் மரபணுக்களையே குழந்தை கொண்டிருக்கும்.) இரு பெண்கள், ஒரு ஆணின் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்கின்றார்கள். எங்களுடைய சமுதாயத்தில்  ஒரு பெண் செய்யக் கூடிய மிக உயர்ந்த சேவைதான் வாடகைக்கு கருவைறகள் விடுவது என இதில் ஈடுபட்டுள்ள டாக்டர் நயனா பட்டேல் பெருமிதம் கொள்கிறார்.

ஆனால் இதில் உள்ள  அரசியல், ஆதிக்கம், பெண்களின் மன உளவியல் என்பன புதைக்கப்பட்டு விடுகின்றன. வறுமையில் உள்ள பெண்களை பலவந்தப்படுத்தும் ணவன்மார்கள் 4000 யூரோவுக்கு தமது மனைவிமாரின் கருவறைகளை வாடகைக்கு விடுகின்றனர். அப்பெண் பெண் 9 மாதம் தனது வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு ஒட்சிசன் தண்ணீர் சத்து என அனைத்தையும் கொடுத்து ஒரு வேலையாக நினைத்து குழந்தையை சுமக்கவில்லை என வாடகைத்தாயின் பேட்டியில் அறிய முடிகிறது. 90 வாடகைத்தாயின் மூலம் 120 குழந்தைகளை பிறப்பித்துள்ளார்கள் இதில் 50 வயதுடைய பெண்ணும் அடக்கம். வாடகைக்கு விடப்படும் கருவறைகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றன எனக் கூறும் ஊடகவியலாளர்கள் குழந்தையில்லாத வெளிநாட்டவர்கள் தங்கள் குழந்தைக்கனவை இந்தியாவில் நனவாக்கி கொண்டு இந்திய குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்கிறோம். என்ற வாசகத்தை உச்சரிக்க வாடகைக் கருவறைகளுக்கு ஒப்பந்தம் செய்யும்  வைத்தியர்களது கட்டாப்பெட்டி நிறைகிறது என்கின்றனர்.     இப்பிரச்சினையை வீடியோ  ஆவணப்படமாக காட்டியதோடு  பிரஞ்சில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து தனது கருத்துக்களை  முன் வைத்துப் பேசினார் பரிமளா.

அடுத்த நிகழ்வாக  இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்  என்ற  தலைப்பின் கீழ் தில்லை தனது கருத்தை முன்வைத்துப் பேசினார். இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றத்தினைத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரிவினர் குறித்த விடயங்கள் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்துவரும் இந்த சூழலில் நம் பெண்களின் நலன்கள் குறித்த விடயங்களும் இன்று கூர்மையாக கவனிப்புக்குள்ளாக வேண்டியுள்ளது.
இன்றைய அடையாள அரசியலின் பிரத்தியேகங்களை அடையாளங் காண்பதிலும், பிரக்ஞைகொள்வதிலும் எங்கு தவறிழைத்திருக்கிறோம் என்பதை சுயவிமர்சனம் செய்யவேண்டியிருக்கிறது. ஆணாதிக்க கட்டமைப்பு அதன் சித்தாந்தம், அதன் புனைவு அதன் அத்தனை ஆதிக்க கட்டுமானங்களையும் தகர்த்தெறிவதற்கான போராட்டத்தை மேற்கொள்ளும் அதேவேளை ஆணாதிக்கத்திற்கு அடுத்ததாக பெண்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்காகவும் சமகாலத்தில் நிற்கவேண்டிய தேவை உள்ளதை சுட்டிக்காட்டி  மிக அழகாக தனது கருத்தை முன்வைத்தார். 
தில்லையின் உரையாடலுக்கு தேவா தலைமை தாங்கினார். (தில்லையின் இக்கட்டுரையை ஊடறு, மற்றும் புகலியில்  முழுமையாக வாசிக்கலாம்.)

 மல்லிகா தலைமையில் நடைபெற்ற அமர்வில் பிரபா   கணவனை இழந்த பெண்களின் தற்போதைய நிலைமைகள், எதிர்கால வாழ்வு குறித்த தனது கருத்துக்களை முன்வைத்தார்

விதவை என்ற சொல்லில் தனக்கு உடன்பாடு இருப்பதால் தான் விதவைகள் என்ற சொல்லையே பாவிப்பதாகவும் கூறிய பிரபா தனது கருத்துக்களை முன்வைத்தார். தொடரும் யுத்த அவலம் கணவனையிழந்த பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்தே செல்கின்றது. வலிகாமத்தின் ஆனைக்கோட்டை, சாவற்காடு கிராமத்தில் மட்டும் ஒட்டு மொத்தப் பெண்களில் 30 சதவீதமானவர்கள் கணவனையிழந்த பெண்கள். அவர்களுக்கு எந்தவொரு தரப்புமே உதவுவதுமில்லை. அதே போல் கிழக்கில் 45,000க்குத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

பெண்களுக்கான உதவிகளுக்கென பல அமைப்புக்கள் செயற்படுகின்ற போதும் அவர்கள் கணவனையிழந்த பெண்கள் தொடர்பில் கூடிய கரிசனை எடுப்பதாகத் தெரியவில்லை. இடையிடையே கணவனையிழந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்களையோ 100 ரூபா பிச்சைக்காசு வழங்குவதோடு மட்டும் தமது பணியை நிறுத்திக் கொள்கிறார்கள். கணவனையிழந்த பெண்களுக்கு  நீண்ட காலத்தில் உதவக் கூடியவாறான எந்தவொரு உதவியும் இப் பெண்கள் அமைப்புகளிடமிருந்து கிடைப்பதாகத் தெரியவில்லை.  பெரும்பாலான கணவனையிழந்த பெண்கள். மோசமான உளவியல் நோய்களிற்கு உள்ளாகியுள்ளனர். என்றும்  எடுத்துக் கூறினார் அவரின் கருத்துக்களை தொடர்ந்து கலந்து கொண்ட பெண்கள் கணவனையிழந்த  பெண்களுக்கு  புலம்பெயர் நாடுகளில் இருந்து எந்த வகையில் நலன்புரி உதவிகளை வழங்குவது எனவும்  அவ்வாறான உதவிகளை வழங்குவதிலுள்ள நன்மை தீமைகளும் ஆராயப்பட்டதுடன் சில  நடைமுறைக்குச் சாத்தியமான சில விடயங்களையும்  சில பெண்கள் முன்வைத்திருந்தனர். உண்மையில் இது வரவேற்கப்பட வேண்டியதொன்று என்றும் தனிப்பட்டரீதியாகவோ அல்லது குழுரீதியாகவோ இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காலம் என்றும் அவற்றிற்கான செயற்திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. 

19 வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்ற பெண்கள் சந்திப்பானது புகலிடச்சூழலில் ஓரளவுக்கேனும் பெண்கள் ஒன்றிணையும் ஒரு மாற்றுக்கருத்திற்கான தளமாக உள்ளது. வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளையும், தனித்துவமான பிரத்தியேகங்களையும்  கொண்ட பல பெண்கள் இச்சந்திப்பில் பங்கு பற்றி தமது கருத்துக்களை முன்வைத்தமை வரவேற்கத் தக்கது. பெண்கள் சந்திப்பு ஒரு சில பயிற்சிப்பட்டறைகளையும்  அதாவது ஓவியம்,  நாடகம் போன்றவற்றையும்  நடத்தலாம் என்ற கருத்துக்களையும் கலந்து கொண்ட பெண்கள் முன்வைத்ததோடு  பெண்கள் சந்திப்பு அதை பாசீலிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.  இறுதியாக விஜி நன்றியுரை கூறினார்.

அடுத்த 29வது பெண்கள்  சந்திப்பு யேர்மனியில் நடைபெற உள்ளது.

தொகுப்பு

றஞ்சி, தில்லை (சுவிஸ்)

 

comments  

Wednesday, October 21, 2009
எனக்கான ஒரு துளி வெளிச்சம்

-தாட்சாயனி (யாழ்ப்பாணம், இலங்கை)

எனக்கான ஒரு துளி வெளிச்சம்

தூரத் தெரிகிறது
ஒரு துளி வெளிச்சம்
நெருங்க நெருங்கக்
கிட்ட முடியாமல்
ஒளியை மட்டும்
வைத்துச் சிமிட்டி
அதே எனது விளக்கு!

நடையாய் நடந்து
கால்களில் வலி...
எனினும் ஒருகணம்
அமர்ந்து பயணம்தொடர்தலில்
விருப்பமில்லை

ஓடிப்போய்
அந்த விளக்கடியில்
வீழ்ந்து விட்டால்
என்னுள்ளும்
ஒளிசுவறும்

அப்போது ஓய்ந்து போகலம்
அது வரைக்கும்
நடையாய் நடந்தபடி
 

 

Oct 2009


comments  

Tuesday, October 20, 2009
இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்

தில்லை (சுவிஸ்)

இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றத்தினைத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரிவினர் குறித்த விடயங்கள் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்துவரும் இந்த சூழலில் நம் பெண்களின் நலன்கள் குறித்த விடயங்களும் இன்று கூர்மையாக கவனிப்புக்குள்ளாக வேண்டியுள்ளது.

இலங்கைப் பெண்கள் குறித்து சிந்திக்கின்ற போது நமது பெண்கள் எவ்வாறு விசேடத்துக்குரியவர்கள் என்பதை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

1) ஐரோப்பாவில் கூட பலநாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்பே 1931 இலங்கை பெண்களுக்கான வாக்குரிமை கிடைத்து விட்டது.
2) பெண்ணை அரசியல் தலைமைக்கு கொண்டுவந்த முதலாவது நாடு நம் நாடு
3) இலங்கையில் ஆண்களைவிட பெண்களே கல்வியறிவு வீதத்தில் கூடியவர்களாகவும் உள்ளனர்.
4) இலங்கையின் பிரதான வருவாயைத் தீர்மானிக்கின்ற மூன்று        பெருந்துறைகளான 
 பெருந்தோட்டத்துறை சுதந்திர வர்த்தக வலயம் உள்ளிட்ட ஆடை உற்பத்தித்துறை வெளிநாட்டுப் பணித்துறை
போன்றவற்றில் பெண்களே பெரும் தொழிற்படையினராக உள்ளனர்.

இவற்றையெல்லாம்  வைத்துக் கொண்டு பெண்களின் நிலை இலங்கையில் ஆரோக்கியமாக உள்ளதென  பொதுவிலக்காகக் காட்டி  விதண்டாவாதம் பண்ணுவோர் சமூகத்தில் ஒரு தளத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இலங்கையிலும், இலங்கைக்கு வெளியிலும் பெண்களுக்காக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் இன்னொரு தளத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எழுதியும், பேசியும், செயற்பட்டும் கொண்டுதான் இருக்கின்றார்கள்.  ஆனால் அவர்களாலும் நாளாந்தம் பலநூறு அடக்குமுறைகளைச் சந்திக்கும் இந்தப்  பெண்களின் நிலைமைகளை விபரிக்கவோ, காட்சியாகக் காட்டவோ முடியாத நிலையே இன்றுவரையுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என நான் அவ்வப்போது புரிந்து வைத்திருந்த விடயங்களை ஆராயும் போது நான் வாழ்ந்த பிரதேசத்தினுள்ளும்  நான் அனுபவித்த அடக்குமுறைகளுக்குள்ளும், நான் சந்தித்த நபர்களுக்குள்ளும், அதற்கு வெளியிலும் இருக்கக் கூடிய விடயங்களையிட்டே உங்களுடன் உரையாட விரும்புகிறேன்.

இலங்கையில் ஆரம்பகாலங்களில் பொதுவாக நான் புரிந்து வைத்திருந்த இடதுசாரியம் மற்றும் பெண்ணியம் என்பது மேட்டுக்குடியைச் சேர்ந்த  உயர்வர்க்க, சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய உயர்கல்வி கற்ற பெண்களின் பெண்ணியத்தைத்தான் பெண்ணியம் என்றும்  நினைத்துக் கொண்டேன். 89, 90 களின் பிற்பகுதிகளில் இவ்வாறான பெண்களின் மிக மிக அதிகமான செயற்பாடுகளையும் எழுத்துக்களையும்  அறிந்திருந்தேன்.

அதனைத் தொடர்ந்து எனக்கு கிடைத்த ஒரு சில சந்தர்ப்பங்களில் நான் அவ்வாறான சில பெண்களோடு நேரடியாகப் பெற்ற அனுபவங்களும் சமூகத்தில்  ஒரு பெண்ணாக  அடைந்த சொந்த அனுபவங்களோடும் தொடர்ச்சியாகப்  பெண்களுக்காக இயங்குதல் என்ற தூரநோக்கத்தை புரிந்து கொள்ளவும் அதற்கான தேடல்கைளை விரிவு படுத்தவும் தொடங்கினேன். 

அதன் பெறுபேறாக பெண்களுடனான வேலைத்திட்டத்தில் நேரடியாக எனக்கு கிடைத்திருந்த அனுபவங்களுடாக ஒன்றை மட்டும் நான் மிகக் கறாராகப் புரிந்து கொண்டேன் இல்லை.  இல்லவே இல்லை.  இன்றைய சூழலில் சிலர் தெரிந்திருந்த போதும் பலர் கண்டுகொள்ளாத, இன்னுமொரு சமூகத்தால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்ட என்னைப் போன்ற  பெண்களிடம் உள்ள பெண்ணியம் வேறு, எனது சமூகப் பெண்களுக்கான பிரச்சனை வேறு என்பதைப் புரிந்து கொண்டேன். 

இதன் தொடர்ச்சியாகவே  இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியிலுமுள்ள  பெண்ணியங்களின் வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். எனது சமூகத்துப் பெண்களின் பிரச்சனைகளை இனம் காண்பதற்கூடாகவே  எனக்கான பெண்ணியத்தை நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன்.

அவ்வாறெனில் நான் புரிந்து கொண்டிருந்த பெண்ணியம் இவ்வளவு காலமும் பெண்களுக்காக இயங்கவில்லையா?
-அந்தப் பெண்களுக்காகக் கதைத்தோம்,
-இந்தா இவர்களுக்காக இதைக் கதைத்திருக்கிறோம்,
-இவர்களுக்காக இதைச் செய்திருக்கிறோம்

என விதிவிலக்காக உள்ள விடயங்களை எல்லாம் பொத்தம் பொதுவாக கொண்டுவந்து சேர்த்து, இந்தா இருக்கிறது இவர்களுக்காக  நாங்கள் இவ்வளவு செய்திருக்கிறோம் என தங்கள் நலன்சார் நியாயங்களைப் படார் எனச் சபைகளில் தூக்கிப் போட்டு விடுகிறோம்.

நாங்கள் பெண்களாக ஒன்றுபடும் பொழுது நமது எதிரியிடம் வேண்டுமானால் இவற்றிலிருந்து தப்பிப்பதற்கான வாதங்களை முன்வைத்துவிட்டு கடந்துவிடலாம். அது நமக்கு வசதியாகவும் இருக்கும்.

-நாங்கள்  யார் யாரால் ஒடுக்கப்படுகிறோம்
-எந்த வர்க்கத்தினரால்  அடக்கப்படுகிறோம்
-எந்தெந்த சக்தியினரால் ஓரம் கட்டப்படுகின்றோம்

போன்றவற்றை தெளிவாகத் தெரிந்த பெண்களிடமே இவ்வாறு சொல்வதுதான் வேடிக்கையானது இந்த சுயவிமர்சனத்தை நாம் ஏனையோரிடம் பகிரத்தேவையில்லை... குறைந்தது இவ்வாறான பெண் செயற்பாட்டாளர்கள் கூடும் இடங்களிலாவது நாம் விவாதித்து சரியான திசைவழியைக் கண்டடைய வேண்டிய தருணம் இது.

சரி..., பெண்கள் விடயத்தில் பிரதான பேசுபொருளை ஊடறுத்து உப விடயங்களிலும் கவனக்குவிப்பை செய்யவேண்டிய பொறுப்புடையவர்கள் நாம் அல்லவா? அந்த பொறுப்பு எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது? அதற்கு தடையாக இருந்த நலன்கள் என்ன? பின்புல சித்தாந்தங்கள் என்ன? எதிராக இருந்த சக்திகள் யார்? அவர்கள் கண்ட வெற்றிகள் தான் என்ன?

சமூக மாற்றத்தை நிகழ்த்தும் போக்கில் பேரரசியலிலிருந்து இந்த நுண் விடயங்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டது ஒன்றும் தற்செயலாக நிகழவில்லை. அதற்குப் பின்னால் பொறுப்பற்ற நலன்கள் நிச்சயமாக இருந்தேவந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தனித்தும் ஐக்கியப்பட்டும்

கடந்தகாலங்களில்  நாங்கள் பெண்களுடைய பிரச்சனைகளுக்காகத் தனித்தும் பேரரசியலில் ஐக்கியப்பட்டும் செயற்பட்டபோது

1) சமூகத்திலுள்ள அனைத்து நுண் விடயங்களிலும் அக்கறை செலுத்தினோமா?
2) அவற்றை குறைந்த பட்சமேனும் புரிந்து கொண்டோமா?

அவ்வாறு இருந்திருப்போமானால் எங்கள் மேலான தற்கொலையை நாங்களே        நிகழ்த்த வேண்டி இருந்திருக்காது.

இலங்கையில் யுத்தத்தால் முதலாவது பாதிக்கப்பட்டவளும்
பெண் இரண்டாவது பாதிக்கப்பட்டவளும் பெண் 
மூன்றாவதாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவளும் பெண்
என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாங்கள்

1.அந்தப் பெண்களின் பிரேத்தியேக நலன்களிலும் அடக்கு முறைகளிலும் சவால்களிலும் எவ்வாறு பங்களித்தோம்?
2.இந்தப் பெண்களின் எந்த நிலைமைகளுக்கு ஆதரவாக இருந்தோம்?
3.சமூகத்தின் எந்த சக்திகளின் கருத்துக்களுக்குச் சாதகமாக இருந்திருக்கிறோம்? இருந்துவருகிறோம்?
4.ஒடுக்கப்படும் சமூக சக்திகளின் தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாமே போராடமுற்படுகையிலெல்லாம் அதற்கான அனுமதி மறுத்து „அதனை நாங்கள் பேசுகிறோம்.... நாங்கள் மட்டும்தான் பேசுவோம்...' என்று கையிலெடுத்தவர்கள் குறைந்த பட்சம் பாதிக்கப்பட்டவர்கள் என்ன பேச விரும்புகிறார்கள் என்றாவது கேட்டார்களா?

இவ்வாறான கேள்விகளை உருவாக்கும் போதுதான்  
1) யார் தவறவிட்டார்கள்?
2) எதைத் தவறவிட்டார்கள்?,
3) எதற்காகத் தவறவிட்டார்கள்?
      என்ற பதில்களையும் பெற முடியும்.

உதாரணங்களுக்காக  நான் சந்தித்தவைகளும் அனுபவித்தவைகளும் அறிந்தவைகளும் சில

• பிரதேச ரீதியாக தான் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் அங்குள்ள பெண்களுக்குள்ள பிரத்தியேகப் பிரச்சனைகளையும் உதாரணத்திற்கு அம்பாறை அல்லது மட்டக்களப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கதைத்தால் அதனை ஒரே அடியில் பிரிவினைவாதம் கதைக்கிறாள் கிழக்குத்தேசியம் கதைக்கிறாள் என்கிறோம் .அந்தப்  பெண்களுக்குப் பிரிவினைவாதம் தெரிந்திருந்தால் தங்களது கணவர்கள் செய்யும் அத்தனை கொடுமைகளையும் கொடூரங்களையும் தாங்கிக் கொண்டு வீடுகளில் இருந்திருப்பார்களா?

• தான் வாழும் சமூகத்தால் தலித் என்கிற ஒரு காரணத்திற்காக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண் தனக்கு எதிரான ஒடுக்குமுறையை  கதைத்தால் அதையும் ஒரே அடியில் எதிர்த்து எதற்காக இந்த இடத்தில் இதைக் கதைக்கிறாள்? சாதியம் கதைக்க வந்திட்டாள் என்கிறோம்  அந்தப் பெண் என்ன உயர்சாதியமா கதைத்தாள்? இல்லையே தனக்கான சமூக நீதியை மட்டுமல்லவா அவள் கோரினாள்.

•காலங்காலமாக சொந்த வாழ்வாதாரப் சிக்கல்களை மலையகப் பெண்கள் முன்வைக்கும் போது இன்றுள்ள நிலையில் எரியும் பிரச்சனை இவர்களுடையதா? என்று அந்தப் பெண்களின் குரலையும் உணர்வையும்  ஓரே அடியில் மடக்குகிறோம். 

• அவளுடைய சமூகத்துக்கு நிகழ்ந்த கொடுமைகளையும் இழப்புக்களையும் துரோகங்களையும் முஸ்லிம் பெண்கள் விபரிக்கும் போது முஸ்லிம் தேசியம் கதைக்க கிளம்பிட்டாள் மதஅடிப்படை வாதி என்கிறோம்.

• இவ்வாறான நுண் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தெரிந்தும் புரிந்தும் கொண்ட ஒரு பெண் தனக்கான பிரத்தியேகப் பிரச்சனைகளைத் தள்ளி வைத்துவிட்டு பிரதான நீரோட்டத்திலுள்ள விடயங்களைக் கதைக்கும் போது அவளையும் ஒரே அடியில் புறக்கணித்தும், சந்தேகித்தும் அவள் மீது இலகுவாக முத்திரை குத்தி உலகம் புராவுமுள்ள நண்பர்களுக்கு அறிவித்தும், உறவுகளாலும் அவளைக் கைவிடுகிறோம்.

சமூகத்திலே இருக்கக்கூடிய அனைத்து அடக்கு முறைகளுக்காவும் குரல் கொடுக்கப் போகிறோம்.
என்று சொல்லிக் கொண்டு மேலெழுந்தவர்களால் எப்படி இவைகள் எல்லாவற்றையும் இவ்வாறு பார்க்க முடிந்தது?

தனித்து பெண்களின் பிரச்சனைகளை பேசும் அதேவேளை ஏனைய விடயங்களில் ஐக்கியப்பட்டும் செயற்பட வேண்டிய பொறுப்பு நம்முடையது... இதில்... தமக்காகவும் கதைத்துக்கொண்டு மற்றவர்களுக்காகவும் குரல் கொடுக்க எங்கு தவறினார்கள்?

இவ்வாறாக கடந்த காலங்களில் என்னுடைய சமூகத்துக்குள்ளும் நுண் தளங்களுக்குள்ளும் பல்வேறுவகையான முரண்பாடுகளைச் சந்திக்க  நேர்ந்த போதுதான் அதனை ஆராயும் பக்குவமும் வித்தியாசங்களைக் கண்டுகொள்ளும் பக்குவமும் மேற்கிளம்பியது.

ஆகவே இன்றைய அடையாள அரசியலின் பிரத்தியேகங்களை அடையாளங் காண்பதிலும், பிரக்ஞைகொள்வதிலும் எங்கு தவறிழைத்திருக்கிறோம் என்பதை சுயவிசாரணை செய்யவேண்டியிருக்கிறது.
ஆணாதிக்க கட்டமைப்பு அதன் சித்தாந்தம், அதன் புனைவு அதன் அத்தனை ஆதிக்க கட்டுமானங்களையும் தகர்த்தெறிவதற்கான போராட்டத்தை மேற்கொள்ளும் அதேவேளை ஆணாதிக்கத்திற்கு அடுத்ததாக பெண்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்காகவும் சமகாலத்தில் நிற்கவேண்டிய தேவை உள்ளதையே இங்கு அதிகம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

- பெண், பெண்ணானதாலேயே பிரச்சினை என்றால்,
-ஒடுக்கப்படும் வர்க்கத்தை சேர்ந்த பெண்ணானதாலேயே வேறு பிரச்சினையை எதிர்கொள்கிறாள்,
-தலித்தாக பிறந்ததாலேயே தலித் பெண் பாதிக்கப்படுகிறாள்,
-ஆதிக்க சமயமொன்றில் பிறக்காததற்காகவே அவள் இன்ன சமயமென்பதற்காகவே பாரபட்சத்திற்குள்ளாகிறாள்,
-இன்ன பிரதேசத்தில் பிறந்ததற்காகவே பிரதேசவாத வேறுபாடுகளுக்கு பலியாகிறாள்.
-இன்ன இனத்தவளானதாலேயே அவள் சீரழிக்கப்படுகிறாள்.

ஆணும் பெண்ணும் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினை என கூறி இதனை நிராகரித்துவிடாதீர்கள். பெண் இந்த அடையாளங்களால் மேலும் விசேடமாக ஆண்களை விட பாதிக்கப்படுகிறாள் என்பதையே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
இலங்கை அரசியலின் பிரதான நீரோட்டத்தில் பேரரசியலாக ஆக்கப்பட்ட பிரச்சனைகளின் போது கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட நுண் பிரச்சனைகளும் அவைசார்ந்த நுண் அரசியலும் நம்முடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் வர்க்கப்பிரச்சனை, தேசியப்பிரச்சனை, சாதியப் பிரச்சனை, சமயப்பிரச்சனை ஆகியவற்றுக்குத் தனித்த வடிவமும், தனித்த பண்புகளும், தனித்த பாத்திரமும் உண்டு இதை யாரும் மறுக்க முடியாது.

எனவே வர்க்கம், சாதி, பிரதேச, மற்றும் தேசிய எல்லைகளோடு  பேரரசியலில் ஜக்கியப்பட்டவர்கள்,  தனித்து பெண்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தமது ஆதிக்க  மனோபாவத்தால் அடக்கப்பட்ட சாதாரண பெண்கள் எதிர்கொள்ளும் அவர்களுடைய பிரத்தியேகப் பிரச்சனைகளை கடந்த முப்பது ஆண்டுகளாக ஏன் கண்டுகொள்ளாதிருந்தனர்?

பேரரசியல் எவ்வாறு  தனது ஆதிக்க நலன்களுக்காக  அப்பெண்களையும் அவர்களுடைய தனித்துவங்களையும் அடக்கி ஒடுக்கியதோ  அதிலிருந்து இம்மியளவும் வித்தியாசங்கள் இன்றி, இதர ஒடுக்கப்பட்ட சக்திகளும் அப்பெண்களின் குரல்களை  அடக்கித்தான்  வந்துள்ளது.
இவ்வாறான ஒற்றைச் சிந்தனையும் அடக்குமுறையுமே எமது ஒட்டுமொத்த புரட்சிகரமாற்றத்துக்கான அரசியல் சீரழியக் காரணமாக இருந்தது.

ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவினர்களுக்காக இயங்குவதாக அறியப்பட்ட பல சக்திகள் அவரவர் நிலையில் பரஸ்பரம் ஏனைய அடக்குமுறைகளுக்கும் எதிராக கைகோர்த்து நிற்பதில் தவறிழைத்தே வந்திருக்கிறார்கள்.ஆகவே ஆரம்ப காலங்களில் நாம் தவறவிட்ட விடயங்களையும் அனைத்துப் பெண்களினது பிரத்தியேகங்களையும் அவர்களுடைய தனித்துவங்களையும் அடையாளம் கண்டு அவற்றையும் சேர்த்துக்கொண்டு செல்லக்கூடிய உரையாடல்களையும் வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பதே இன்று ஆரோக்கியமானதாகும்.

திறந்த பெண்ணிய உரையாடல்களுக்கும் சமூகத்தில் பெண்கள் இன்று எதிர்கொள்ளும் விசேட பிரச்சனைகளுக்கும் இந்தக் காலகட்டத்தைப் பெண்ணியச்
செயற்பாட்டளர்கள் தமது கைகளில் எடுக்க வேண்டும் என்பதே  எனது எதிர்பார்ப்பாகும்.

நிறைவாக

ஆரம்பகாலங்களில் தமது சிந்தனைகளாலும் தீவிரமான பெண்ணியச் செயற்பாட்டாலும், பெண்ணிய எழுத்துக்களாலும் இலங்கைக்குள்ளும் அதற்கு வெளியிலும் நன்கு அறியப்பட்ட, பெண்ணிய செயற்பாட்டாளர்கள், இன்றுள்ள   புதிய கருத்தியல் போக்குகளுடன் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்டும் புதியவர்களை இணைத்துக் கொண்டும் செயலாற்றவேண்டிய காலமிது. நாம் பெண்களின் கூட்டிணைவிற்கான மனோநிலைகளை ஊக்குவிப்பவர்களாகவும், வளர்ப்பவர்களாகவும் செயற்படுபவர்கள் என்பதை உறுதிசெய்துகொள்வோம்.
நாம் நமக்குள் தனித்தும், ஏனைய போராட்டங்களில் ஐக்கியப்பட்டும் முன்னேறுவோம் விடுதலை நோக்கி....

 

10.10.2009 அன்று பெண்கள் வசந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை இங்கு நன்றியுடன் பிரசுரமாகிறது.


comments  

Monday, October 19, 2009
Sri Lanka faces loss of EU trade perks over rights

Sri Lanka faces loss of EU trade perks over rights 

ஐரோப்பிய யூனியனே  இலங்கையின் பாரியளவிலான ஏற்றுமதி பிராந்தியமாக இருந்தது. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் அதிகளவான 36 வீதம் ஐரோப்பிய யூனியனுக்கே மேற்கொள்ளப்பட்டது. . அது ஐரோப்பிய யூனியன் சந்தையால் ஆடைக் கைத்தொழில் ஏற்றுமதி மூலம் இலங்கை 3.47 பில்லியன் டொலரைப் பெற்றுக் கொண்டது.  இது அந்நியச் செலாவணி ஈட்டலின் பெரும் சந்தையாக இருந்துள்ளது. இலட்சக்கணக்கான ஆடைத்தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடலாம் கூறப்படுகின்றது. இலங்கை கூடுதலாக இராணுவமயப்படுத்தலினால் இறுகிய நிலையில்  ஐரோப்பிய யூனியனின் இப்பிரச்சினை இலங்கையில் வேலையில்லாப் பிரச்சினையை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடுதலாக ஆடை தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் வேலைவாய்ப்பினை இழக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது

 

Oct 2009

comments  


Previous Page Next Page


<< November 2009 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
01 02 03 04 05 06 07
08 09 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30


ARCHIVE/உள்ளீடு
(ஆண்டு வாரியாக)






கவிஞைகள்
கவிதைகள்

 "poets-poems"


poems on other languages






book collection

வேண்டுகோள் : பெண் படைப்பாளிகள் தங்களது நூல்களை மின்நூல் வடிவில் எமக்கு அனுப்பினால் இந் நூலகத்தில் சேகரமாகும்



கமரா மொழி




இணையசாலை




பெயரிடல்








   










If you want to be updated on this weblog Enter your email here:



rss feed