A TAMIL E-ZINE FOR WOMEN'S WRITINGS, ARTS & LITERATURE - OODARU
Best Viewed on Internet Explorer

font type:
tamil unicode

published on
2005 June

editors:
ranji(swiss)
deva(germany)

email:
udaru@bluewin.ch



make a comment

உங்கள் பதிவை தமிழ் யுனிகோட் இல் எழுதிக்கொள்ளுங்கள். நன்றி.

எழுத்துருமாற்றி
நன்றி: சுரதா.கொம்


Saturday, February 02, 2008
info-dalit conf.2008

தகவல் : ஒழுங்கமைப்பாளர்கள் SDOSD

comments  

Friday, February 01, 2008
film -criti rajes

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (லண்டன்)

இரு ஹொலிவூட் படங்களின் சிறு விமர்சனங்கள்...

  

கடந்த ஆண்டின் கடைசிப்பகுதியிற் தயார்செய்யப்பட்டு தற்போது சினிமா அரங்குகளில் வெற்றிநடைபோடும் அமெரிக்க ஹொலிவூட் படங்களில் charles wilson's war, Kite runner என்ற இரு படங்களும் பல விதங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக வெளி வந்திருக்கின்றன. ஒஸ்கார் விழாவுக்குச் சில மாதங்களுக்கு முன் சில திறமையான, பிரச்சினைக்குரிய படங்கள் வெளிவருவதுண்டு. கடந்த சில வருடங்களாக அப்படியான சில படங்கள் வந்து சில பரிசுகளைத்தட்டிக்கொண்டு போயின.இப்போது வந்திருக்கும் இப்படங்களும் பல நிறுவனங்களின் தெரிவுகளில் இடம் பெற்றிருக்கின்றன. இவ்வருடம் வந்திருக்கும் இரண்டு முக்கியமான படங்களான ''சார்ல்ஸ் வில்சனின் போர்'', ''பட்டம் ஓட்டுபவன்'' என்ற இரு படங்களும் சிறந்த இரு நாவல்களிலுருந்து திரைப்படங்களாக வந்திருக்கின்றன.

1. ''Charles Wilson's War''

சில வருடங்களுக்கு முன் கிறிஸ்த சமயவாதிகளால் மிகவும் எதிர்க்கப்பட்ட ' டாவின்சி கோட்'' என்ற படத்தின் கதநாயகனக நடித்த டொம் ஹாங் என்ற சிறந்த நடிகர் இந்தப்படத்தின் முக்கிய பாத்திரமான சார்ல்ஸ் வில்சன் என்ற அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில காங்கிரஸ் பிரதிநிதியாக நடிக்கிறார். சார்ல்ஸ் வ்¢ல்சன் என்ற ஒரு காங்கிரஸ் பிரதி நிதி, உலக சநித்திரத்தின் ஒரு முக்கியபகுதியை மாற்றிய பெருமைக்குரியவராகப் படைத்து இந்தப் வந்திருக்கின்றது. ஒரு பெரிய மாபெரும் சர்வதேச அரசியல் மாற்றத்தை உண்டாக்கிய அமெரிக்க வல்லமை என்ற அக்கினி பிறக்க, அமெரிக்காவின் சிறு அரசியல் கருவாய்ச் சார்ல்ஸ் வில்சன் இருந்திருக்கிறார் என்று இப்படம் சொல்கிறது.

கதைச்சுருக்கம்:
1980ம் ஆண்டின் ஆரம்பகாலகட்டத்தில், இரஷ்யா தனது படையை 130.000 துருப்புக்களை ஆபுகானிஸ்தானுக்கு அனுப்புகிறது. அப்படையெடுப்பில் ஆயிரக்கணக்கான ஆபுகானிஸ்தானிய மக்கள் இறக்கிறார்கள். ஆபுகானிஸ்தானின் ஐந்திலொரு பகுதி மக்கள் பாகிஸ்தானின் பெஷாவர் நகர்ப்பகுதிகளில் அகதிகளாக ஓடிப்போய்த் துன்பப்படுகிறார்கள். இரஷ்யியப்படைகளை எதிர்க்க ஆபுகானிஸ்தானின் முஜாஹடீன் என்ற போர்க்குழுவினர் போராடுகிறார்கள். அவர்களிடம் இரஷ்யாவின் அதி நவீன ஆயுதங்களை எதிர்க்கும் வல்லமையுள்ள ஆயுதங்கள் எதுவும் கிடையாது. aமெரிக்க சி.ஐ.ஏ ஸ்தாபனம் இரஷ்யப்படைகள், வளர்ச்சியற்ற ஆபுகானிஸ்தான் நாட்டில் அதிகாரபலமாக முன்னேறுவதைப் பற்றிப்பெருதும் அக்கறை எடுக்கவில்லை.மதுவும் மங்கைகளும் என்று உல்லாச வாழ்க்கை நடத்திப் பல பிரச்சினைகளில் அகப்பட்டுக்கொண்டு தவிக்கும் சார்ல்ஸ் வில்சன் என்ற டெக்ஸாஸ் மாநில காங்கிரஸ் பிரதி நிதி ஆபுகானிஸ்தானில் இரஷ்யா முன்னேறிக்கொண்டுவருவதையும் மக்கள் படும் துன்பத்தையும் அமெரிக்கா ஏன் சட்டை செய்யவில்லை என்று கேள்விகேட்கிறார். அமெரிக்காவின் உளவுத்தாபனமான C.I.A. (Central Intellegence Agency), பாகிஸ்தானில் இருந்து கொண்டு ஆபுகாஸ்தானின் நிலைபற்றி அதிகம் கவலைப்படவில்லை என்று சி. ஐ. ஏ அதிகாரிகலிலொருத்தனான கஷ் அவ்ரொகோடா(பிலிப் செய்மொர்) என்பவன் குமுறுகிறான்.

அதே நேரம் ஹ¥ஸ்டன் மாநில காங்கிரஸ் பிரதி நிதியும் , சார்ல்ஸ் வில்சனின் சிலவேளைக்காதலியுமான அமெரிக்காவின் ஆறாவது கோடிஸ்வரியிமான ஜோஆனா ஹெர்ரிங் (ஜூலியட் ரொபேர்ட்), இரஷ்யாவைத் தோற்கடிக்க பாகிஸ்தானின் உதவி எடுக்கவேண்டும் என்று சொல்கிறாள்.'இன்று ஆபுகானிஸ்தானுக்குள் கால் வைத்திருக்கும் இரஷ்யா நாளைக்கு மற்றைய அண்டை நாடுகளான ஈராக், இரான்,மத்தியதரைக் கடல் நாடுகளுக்குள்ளும் அதிகாரம் செலுத்தும். அந்தத் திட்டத்தை அடியிலேயே கிள்ளியெறிந்து இரஷ்யாவைத் தோற்கடிக்கவேண்டிய முக்கியம்' என்று அழுத்திக்கூறுகிறாள்.அந்தக்கால கட்டத்தில் இந்தியாவில் இந்திரா காந்தி இரஷ்யாவுடன் நல்லுறவை வைத்திருந்தார். பாகிஸ்தான் ஜனாதிபதி ஷியா உல் ஹாக் அமெரிகாவின் உதவியுடன் மிகப்பெரிய ஆயுதச்சேர்வுகளைச்செய்து கொண்டிருந்தார்.

சார்ள்ஸ் வில்சன், கஸ் அவ்ரொகொடா,ஜோஆனா என்ற மூவரும் சேர்ந்து, இரஷ்யாவுக்கு எதிரான ஆபுகானிஸ்தான் முஜாஹடீன் போருக்கு உதவி செய்ய அமெரிக்கா ஒதுக்கிய ஐந்து மில்லியன் டாலர்களை ஒரு பில்லியனாக உயர்த்தி நவீன ஆயுதங்களை, இஸ்ரேலின் உதவியுடன் பாகிஸ்தான் வழியாக ஆபுகானிஸ்தானின் முஜாஹடீன் போராளிகளுக்கு அனுப்பி இரஷ்யாவைத் தோற்கடிக்கப்பண்ணுகிறார்கள்.

விமர்சனமும் கருத்தும்:
அன்று அமெரிக்காவின் உதவியுடன் ஆபுகானிஸ்தான் முஜாஹடீன் போராளிகளால் உண்டான இரஷ்யாவின் இந்தத் தோல்விதான் இன்று உலகில் நடக்கும் பலமாற்றங்களுக்கு அத்திவாரம் என்றால் அது மிகையாகாது. ஆனால் இந்தப்படத்தைப் பார்க்கும்போது ஆபுகானிஸ்தானில் முஜாஹடீனின் போராளிகளின் திறமையும், அமெரிக்காவுடன் சேர்ந்திருந்த பின்லாடனின் வரலாறும் ஒட்டு மொத்தமாக மறைக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவூட் படங்களில் அரசியல் திணிப்புக்கள், சமூகக் கருத்துக்கள், இனவாதக் கொடுமைகள் என்பன திறமையாகக் கையாளப்படுவதுண்டு. இந்தப்படம் ஒட்டு மொத்தமாக இரஷ்யாவை மிகவும் ஒரு முட்டாளாகவும் பலவீனமானதான, அரசியற்திறமையற்ற நாடாகக் காட்டுவதற்கு எடுத்த படம்போற் தெரிகிறது. அன்று இரஷ்யா ஆபுகானிஸ்தானில் செய்த கொடுமைகளைக்கு ஒரு சில வருடங்களுக்கு முன் வியட்நாமிலும், நிக்கராக்குவாவிலும் இன்று, ஈராக் நாட்டில் அமெரிக்கப்படைகள் செய்கின்றன.

80 ஆண்டுகளின் முற்பகுதிகளில் இரஷ்யா ஆபுகானிஸ்தானில் எதிர்நோக்கிய தோல்வியும் அதைத்தொடர்ந்து, மேற்கு வல்லரசுகளால் ( பிரிட்டிஷ் பிரதமர் மார்கிரட் தச்சர், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகன்) முன்னெடுத்த இராஜதந்திரங்களாலும் இரஷ்யாவின் வல்லமை உலக நாடுகளில் குறைகிறது. இரஷ்யா பிளவு படுகிறது. ஜேர்மனி இணை படுகிறது. இரஷ்யாவின் சினேகித நாடுகளாயிருந்த பல நாடுகள் குழம்புகின்றன. இந்தியா போன்ற பெரியாநாடுகள் அமெரிக்கா சார்பெடுக்கிறது. மத்திய தரைப்பகுதி நாடுகள் அமெரிக்காவின் புதிய காலனித்துவத்துக்குள் அகப்பட்டுக்கொள்கிறன்றன.

இன்று பல நாடுகள் பொருளாதார ரீதியாக மேற்கு வல்லரசுகளைச் சவாலுக்கு அழைக்கின்றன. வளர்ந்து வரும், சீனா, இந்தியா, பிரேசில், நைஜீரியா என்பன ஏதோ ஒருவகையில் அமெரிக்காவுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தப் படுத்தப்படுகின்றன. உதாரணம் இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையிலான அணுபரிசோதனை ஒப்பந்தங்கள் என்பன ஒரு சிறு உதாரணம். அமெரிக்காவின் வல்லமையைச் சாதாரண மக்களால் அங்கிகரிக்கவும் அனுமதிக்கவும் , அமெரிக்காவின் மாபெரும் சக்தியான பணவலிமை, நவீன போர்க்கருவிகள் பற்றிய விளக்கங்கள் சர்வஜன மயப்படுத்தப்படவும் இந்தப்படம் பயன் படுத்தப்பட்டிருக்கிறதுபோற் தெரிகிறது. ''சார்ல்ஸ் வில்சனின் போர்'' என்ற ஹாலிவூட், வர்த்தக சினிமா அமெரிக்காவின் 'மேதகு'' ஸ்தானத்தை மிகவும் திறமையாகச் வலு செய்திருக்கிறது.

உண்மையான நடைமுறையில், இன்று அமெரிக்காவின் பொருளாதாரம் தேக்க நிலை அடைந்திருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தை முன்னெடுக்க அரேபியாநாடுகளின் எண்ணெய் தேவை. தனது தேவையில் மூன்று விகுதத்தை மட்டுமே அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் அமெரிக்காவுக்கு எண்ணெய் கொடுக்கும் நாடுகளான அரேபியா, நையீரியா, பிரேசில் போன்ற நாடுகளின் தயவு தேவை. அவர்களுக்கும் இரஷ்யாவுக்குமிடையில் எந்தவித ஆழமான உறவும் வரக்கூடாது என்பது அமெரிக்காவின் வெளிவகாரக் கொள்கைகளில் ஒன்றாகும். இன்று ஆபிரிக்கா நாடுகளில் சீனா காலூன்றத்தொடங்கிவிட்டது. கென்யா, தான்சானியா போன்ற நாடுகளில் இந்தியா வர்த்தகம் கோலோச்சுகிறது. நையீரியா தனது தேவைகளான மருந்து உற்பத்தி போன்றவற்கு மேற்கு நாடுகளை நம்பாமல் தனது உற்பத்தியைத்தனது சினேகித நாடுகளின் தயவுடன் தொடங்கிவிட்டது. இரஷ்யாவுடனுடனிருந்து கிழக்கு ஐரோபிய நாடுகள் பிரிக்கப்பட்டாலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான 'காஸ்' இரஷ்யாவின் தயவிற் தங்கியிருக்கிறது.

பொருளாதரீதியில் உலக நாடுகளை அடிமைப்படித்தி வைக்க முடியாத அமெரிக்கா தனது நவீன ஆயுத உற்பத்தி.வர்த்தகம் மூலம் தனது வல்லமையை நிலை நிறுத்த முயல்கிறது. சார்ல்ஸ் வில்சனின் போர் என்ற படம் ' அமெரிக்காவின் போர்' என்று பெயெர் வைத்திருக்க வேண்டியபடம். எந்தவிதமான நவீனா ஆயுதங்களாலும் மக்கள் சக்தியை வெல்ல முடியாது என்பதற்கு வியட்நாம் போர் சாட்சியாய் இருந்ததை தலைக்கனம் பிடித்த அமெரிக்கா மறந்து விட்டது. இன்று ஆபுகானிஸ்தானில் நடக்கும் போரில் பங்கு பெற மாட்டோம் என்று அண்டை நாடான கனடாவுக்கு ஓடும் அமெரிக்க இளைஞர்பற்றி ஏன் அமெரிக்கா படம் எடுக்கக்கூடாது என்ற கேள்வி இந்தப்படத்தைப் பார்க்கும்போது மனதில் உதித்தது. ஆபுகானிஸ்தானில் நடக்கும் போருக்கு அமெரிக்க இளைஞர்களைச்சேர்ப்பதற்கு இந்தப்படம் பிரசார சாதனமா என்ற சந்தேகமும் இப்படம் பார்ப்போருக்கு வரலாம்.

அமெரிக்காவின் தயவின்றி எதுவும் வெற்றி பெறாது என்ற பிரசாரத்திற்கு இப்படம் சாட்சியாக இருக்கிறது. ஆபுகானிஸ்தான் மக்களின் போர்த்திறமை மட்டப்படுத்தப்பட்டு பாகிஸ்தானின் ஜனாதிபதிய்யாயிருந்த ஷியா உல்- ஹாக், அப்போது பிரதமராக இருந்த பூட்டோவைக்கொலை செய்தார் என்று கிண்டலான வகையில் இப்படத்தில் பிரகடனப்படுத்தப் பட்டிருக்கிறது. முஸ்லிம் நாடுகளில் ஜனநாயகம் கிடையாது, அமெரிக்கரின் உள்நுளைவாற்தான் ஜனநாயகம் உயிர்வாழும் என்பதை அமெரிக்கப்படம் எடுத்துக்காட்ட முனைகிறது. நாலா பக்கத்திலும் மலைகளால் சூழப்பட்டிருக்கும் ஆபுகானிஸ்தானை, வெளியிலிருந்து வரும் யாராலும் வெற்றி கொள்ள முடியா நாடு என்பதை அமெரிக்கர் மறந்து விடுகிறார்கள்.

வழக்கம்போல் மிகவும் எடுப்பாகத் திரைப்படமாக்கப்பட்டிருக்கும் ஜோர்க் க்ரைல்(george Crile) என்பவரின் நாவலுக்கு மைக் நிக்கல்ஸ்ஸின் டைரக்சன் மெருகு கொடுத்திருக்கிறது. சார்ல்ஸ் வில்சனாக நடித்த பழம்பெரும் நடிகர் டொம் ஹாங்கின் நடிப்பு வழக்கம்போல் மிக அபாரம். சி. ஐ. ஏ ஏஜெண்ட் கஸ் அவ்ரோகோடாவாக நடித்த பிலிப் சேய்மோரின் நடிப்பு யதார்தமாகவே படிந்திருக்கிறது. அரசியல்வாதிக்கு மதுப்போத்தலை லஞ்சம் கொடுத்தபோது, ஒட்டுக்கேட்கும் இரகசியக் கருவிகளையும் போத்தலுடன் சேர்த்துக்கொடுத்து மிகப்பெரிய காங்கிரஸ் பிரதிநிதியை முட்டாளாக்கிய கட்டம் ரசிக்கக்கூடியது மட்டுமல்ல வியக்கத்தக் கதுமாகும். படம்வெளிவந்து பல நாடுகளிலும் ஓடி முடியமுதலே, இப்படம் பல விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. 'பிரிட்டிஷ் பாவ்டா', 'அமெரிக்க கோல்டென் க்லோப்', 'சிக்காக்கோ பிலிம் செண்டர் அஸ்ஸோஸியேசன்', 'ப்ரோட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அஸ்ஸோஸியேசன் அவார்ட்ஸ்' என்று பல விருதுகளைப் பல திறமைகளுக்காகத் ( நடிப்பு-supporting actor -Philip Seymour, திரைக்கதையமைப்பு Screen play -Aron Sorkin, டைரக்சன்-Director Mike Nicholes, திறம்படம்) தட்டிக்கொண்டு போயிருக்கிறது. பணம் படைத்தவர்கள் எது சொன்னாலும் அது இறைவன் மொழிக்குச் சரி, என்பது அமெரிக்காவின் வல்லமையைப் பிரசாரம் செய்யும் இப்படத்தைப் பார்க்கும்போது புரிந்தது.

உதாரணம், எங்களூரில் ஒரு போடியார் இருந்தார். பெண்களும் போத்தலும் அவரின் இரு கண்கள். அவரை எதிர்த்துப்பேசுவார் யாரும் கிடையாது. அவர் இட்டதைச்செய்ய எத்தனையோபேர் கைகட்டி வாய் புதைத்துக் காத்திருந்தார்கள். காலக்கிரமத்தில். ஊரைத் திருத்தவேண்டும் என்று ஒரு இளைஞன் அவருடன் தேர்தலில் போட்டிபோட்டான். போடியாரின் பணம், ஊரின் கோயில் தொடக்கம் குடிசைவரை பேசியது, ஆடியது, அழகாகப்பாடியது, அதிகாரம் போடியாருக்குக் கிடைத்தது. சீர்திருத்தம் கேட்ட இளைஞன் ஊரில் தீண்டத்தகாதவனாக நடத்தப்பட்டான். காலக்கிரமத்தில் அவனும் போடியார் வழியை நாடினான்.மிகுதி எங்கள் எல்லோராலும் ஊகிக்கக்கூடியதே.

2.''.
Kite Runner''-''பட்டம் ஓட்டுபவன்''.

பொருளாதார மட்டத்தின் இரு திசைகளில் வாழ்ந்து பட்டம் விடும் குழந்தை விளையாட்டின் மூலம் ஒன்றாகச் சேர்ந்து, அந்தச்சேர்ப்பு சினேகிதமாக உருவெடுத்து, காலக்கிரமத்தில் ஆபுகானிஸ்தானில் நடந்த அரசியற் கொடுமைகளால் வெவ்வேறு திசைகளில் பிரிந்துபோன இரு சிறு ஆபுகனிஸ்தான் சிறுவர்களை மையப்படுத்திய கதையைக்கொண்டது இப்படம். பட்டம் விடுவது என்பது வானத்தில் தங்களின் படைப்புக்களை வளைத்தும் நெளித்தும் , உயர்த்தியும் தாழ்த்தியும் விடுவதது மட்டுமல்ல. பட்டம் விடுவது என்பது ஒரு மனிதனின் சுதந்திரத்தின் எடுத்துக்காட்டு. ஆக்கத்தின் அலங்கரிப்பு, திறமையின் வெளிப்பாடு, சுதந்திரத்தின் ஒட்டு மொத்தக்குறியீடு என்பதை இப்படம் மிக மிக அழகாக எடுத்துக்காட்டுகிறது.

காலிட் ஹ¤சேன் என்ற ஆபுகானிஸ்தான் எழுத்தாளரின் சிறந்த நாவல் மார்ச் பொfஸ்டர் (Marc Foster) என்பவரின் திரைக்கதை அமைப்புடன் வெளிவந்திருக்கிறது. ஆத்மாவைச் சுண்டியெடுத்துக் கண்ணீர் வரவழைக்கும் கதையைப்பின்னிக் காவியம் படைத்திருக்கிறார் பொfஸ்டர்.இவர் திரைக்கதை எழுதிய ஒஸ்கார்(2001) விருது பெற்ற 'மொன்ஸ்டர் பால்' என்ற படத்தைப்பார்த்தவர்களுக்கு இவரின் கலைப்படைப்புக்களைப் பற்றிச்சொல்லத் தேவையில்லை. அமெரிக்காவின் இனவாதத்தை நவீன யதார்த்தப்படுத்தி Monster ball'' என்ற காவியம் படைத்தவர் பொFஸ்டர்.

கைட் ரன்னெர்- கதைச்சுருக்கம்:

1980ல் ஆபுகானிஸ்தானை நோக்கிய 130.000 இரஷ்ய துருப்புக்களின் படையெடுப்புக்கு முன் பளிங்கற்ற காபுல் நகரின் நீலவானில் உயரப்பறக்கும் பட்டங்களுடன் திரைப்படம் ஆரம்பிக்கிறது. அமீர் என்ற பணக்கர வீட்டுப்பையனுக்கும் அவனது வீட்டில் நீண்ட காலம் வேலைக்கரனாகவிருப்பவனின் மகனான, 'ஷியா' சிறுபான்மையி னத்தவனான ஹசானுக்கும் உள்ள உறவும் நட்பும், நெருக்கமும், பரிவும், பிரிவும், தேடலும், போராட்டமும், குமுறலும், சேரலும் ,மாற்றமும்தான் இந்தப்படக்கதை.

அமீரின் (பணக்காரப்பையன்) பட்டம் விடுவதில் ஆர்வமுள்ளவன் அவனின் தகப்பன் மேல் மட்டத்தைச் சேர்ந்தவன்.மதுவும் மங்கையும் விடயத்தில் தாராள மனப்பான்மையுள்ளவன். அவனின் வீட்டின் நீண்டகால வேலைக்காரனின் மகன் ஹசான் பட்டம் விடுவதில் கெட்டிக்காரன். காபுலில் நடந்த குழந்தைகளின் பட்டம் விடும் போட்டியில் ஹசானின் உதவியுடன் அமீர் வெற்றிபெறுகிறான். இதைப்பொறுக்க முடியாத பாஸ்டுன் என்ற பெரிய இனத்தைச்சேர்ந்த அஷீப் என்பவனும் அவனின் கூட்டாளிகளும் ஹசானை இடைமறித்து அடித்து உதைத்துப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கி விடுகிறார்கள். இதை மறைந்திருந்து பார்த்த அமீர் தன்னால் ஹசானுக்கு உதவ முடியவில்லை என்ற குற்ற உணர்வுகுள்ளாகிறான்.

அமீருக்காக வேலைக்காரப்பையனான ஹசான் எதுவும் செய்வான் எதையும் தாங்கிக்கொள்வான் என்று அமீருக்குப்புரிகிறது. ஆனாலும் அஷீப் போன்ற கொடுமைக்காரக்கூட்டத்திலிருந்து ஹசானைத் தன்னாற் காப்பாற்ற முடியாது என்று புரிகிறது. அமீரின் தவிப்பு,எப்படியும் ஹசானைத் தன்னிடமிருந்து விடுதலை செய்யவேண்டும் என்று முடிவு கட்டுகிறது. ஹசானைத் திருடன் என்று குற்றம் சாட்டுகிறான் அமீர்.நீண்ட காலம் வேலை செய்தும் தங்களுக்குத் திருட்டுப்பட்டம் கிடைத்ததால் ஹசானின் தகப்பன் ஹசானுடன் வெளியேறுகிறான். ஹசானைத் தன் மகன்மாதிரிப் பாசமாக நேசித்த அமீரின் தகப்பன் பாபா, வேலைக்காரனை வீட்டை விட்டுப்போகவேண்டாம் என்று கெஞ்சுகிறார். ஹசான் தகப்பனுடன் அமீரை விட்டுப்பிரிகிறான்.

இரஷ்யப்படை காபுலுக்குள் நுழைகிறது. பணக்காரர்கள் நாட்டை விட்டோடுகிறார்கள். அமீரின் தகப்பன் கொம்யூனிச எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு வாதியாயிருப்பதால்அமீரும் தகப்பனும் பாகிஸ்தானுக்குப்போய் அங்கிருந்து அமெரிக்கா வந்து சேர்கிறார்கள். இரஷ்யர் வரமுதல் ஆபுகானிஸ்தானின்படை அதிபதியாயிருந்து, தற்போது அமெரிக்காவில் அகதியாயிருக்கும் ஆபுகானிஸ்தான் முதியவரின் மகளுக்கும் இளைஞனான அமீருக்கும் காதல் வருகிறது. கல்யாணம் நடக்கிறது. அமீரின் தகப்பன் மரணமடைகிறார்.ஆபுகானிஸ்தானில் தலிபான்கள் கோலோச்சுகிறார்கள். 2000ம் ஆண்டு, அமீரின் சித்தப்பாவிடமிருந்து டெலிபோன் செய்தி வருகிறது. தான் இறக்கமுதல் அமீர் கட்டாயம் காபுலுக்கு வரவேண்டுமென்று கெஞ்சுகிறார்.

சித்தப்பனைப்பார்க்கச் சென்ற அமீர், ஆபுகானிஸ்தானின் தலைநகரான காபுலில் மிகவும் கொடுமையான தலிபான் ஆட்சியை நேரிற் காண்கிறான் அமீர். இஸ்லாமியக் கலாச்சாரத்தைப்பின் பற்றாத குற்றம் சாட்டிப் பெண்கள் பகிரங்கமாகக் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்கள். பெண்கள் கல்வி மறுக்கப்படுகிறது. பெண்கள் வீடுகளில்சி¨றிவைக்கப்படுகிறார்கள்நகர் ஒரு நரக உலகமாகக் காட்சியழிக்கிறது. தாடிவைக்காதவர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். ஒருகாலத்தில் ஹசானைப்பாலியற் கொடுமை செய்து வருத்திய அஷீப் தற்போது காபுலின் தலிபான் தலைவனாக இருக்கிறான்.ஹசான் பற்றிய விபரத்தைத் தனது சித்தப்பாவிடம் அமீர் கேட்கிறான். பல காலத்தின் பின் மீண்டும் அமீரின் வீட்டு வேலைக்காரனாக வந்த ஹசானையும் அவனின் மனைவியையும் பாஸ்டுன் இனத்தைச்சேர்ந்த அஷீப்பின் தலிபான் கூட்டம் சித்திரவதை கொலை செய்து விட்டதாகவும் ஹசானின் ஒரே மகனை அஷீப் பிடித்துக்கொண்டு போய்விட்டதாகவும் சித்தப்பா சொல்கிறார். ஒரு காலத்தில் ஹசான் வீட்டை விட்டுப்போகத் தான் தான் காரணம் என்றழுகிறான் அமீர்.

' ஆனால் அதை விட முக்கிய காரணம் ... ஹசான் உனது தம்பி.. உங்கள் வீட்டு வேலைக்கரிக்கும் உனது தகப்பனுக்கும் பிறந்தவன் ஹசான், அதுதான் உனது தகப்பன் ஹசானைத் தனது குழந்தைபோல் நடத்தினார்' என்று சொல்கிறார் சித்தப்பா.''ஏன் ஹசானை எனது தகப்பன் தனது மகனாக ஏற்றுக்கொள்லவில்லை''? என்று கேட்கிறான் அமீர்.' ஹசானின் தாய் சிறுபான்மையினமான 'ஷியா' முஸ்லிம் , உனது தகப்பன் மேல்சாதி.. அதனால் பகிரங்கமாக ஹசானையும் அவனது தாயையும் உனது தகப்பனால் ஏற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது'' என்று சொல்கிறார் அமீரின் சித்தப்பா.

தங்கள் குடும்பம் ஹசானின் குடும்பத்துக்குச் செய்த கொடுமை கேட்டு வருந்துகிறான் அமீர். உடனையாகத் தனது தம்பியின் மகனைத்தேடிக் காபுல் எங்கும் அலைகிறான் அமீர். தலிபான் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் ஹசானின் மகனைக்காப்பாற்ற எவ்வளவு பணமும் தலிபானுகுத்தரத் தயாரகவிருக்கிறான் அமீர். இஸ்லாமிய ஒழுக்க முறைகளையும் கலாச்சாரக்கோட்பாடுகளையும் முன்னெடுக்கும் தலிபானான அஷீப் ஹசானின் மகனையும் பாலியற் தேவைக்குப்பயன் படுத்திவைத்திருப்பது தெரிகிறது. ஆத்திரத்தில் அஷீப்பைத் தாக்க முயன்ற அமீர் ஹசானின் மகனின் உதவியுடன் தப்பி வருகிறான்.

அமெரிக்காவுக்கு ஹசானின் மகனைக் கொண்டுவந்த குழந்தையில்லாத எனக்கு நீதான் குழந்தை என்று பாசத்துடன் வளர்க்கிறான். படைத் தலைவனாக இருந்த அமீரின் மாமனார் ஹசானின் இனம் பற்றித் (ஷியா முஸ்லிம்)தாழ்வாகப் பேசியதைக்கேட்ட அமீர் ''இவன் எனது வாரிசு. அதற்கு மேல் நீங்கள் ஒன்றும் பேசத்தேவையில்லை''என்று திட்டவட்டமாகச்சொல்கிறான்.

சிறுவயதிலேயே தனக்கு நடந்த கொடுமைகளால் தன்னுடன் ஒட்டாமல் இருக்கும் ஹசானின் மகனுக்கு ''உனது தகப்பனும் நானும் விளையாடிய பட்டம் விட்டுக்காட்டுகிறேன்'' என்று கலிபோர்னியத் திடலில் பட்டம் விட்டி விளையாடிகிறான் அமீர். மாபுகாஸ்தானின் காபுல் நகர வீடுகளுக்கு மேலால் பட்டம் விடும் விளையாட்டுடன் ஆரம்பித்த படம் கலிபோர்னியாவின் மேட்டுத்திடலில் நிர்மலமான நீலவானில் பல்நிற வர்ணத்துடன் பட்டம் பறப்பதுடன் முடிகிறது.

கருத்தும் விமர்சனமும்.
ஒரு எழுத்தாளனின் சொந்த அனுபவத்தின் பிரதிபலிப்பு என்ற கதையானதால் காட்சிகளும் கதையோட்டமும் பல தடவைகள் கண்ணிர் விடவைக்கிறது. கம்யூனிச அடக்கு முறை, தலிபானின் இஸ்லாமிய வரையீடுகளுக்குள் வாழ்க்கையை இழந்துபோன மனிதர்கள் பற்றிய படம் இது. நடிகர்கள், ஸொரயாவக நடித்த அட்டோசா லியொனி அமீராக நடித்த ஷெக்கிரா ஏபிராஹிம் ஹசானாக நடித்த றஹிம் கான் அப்பாவாக நடித்த ஹொமயூன் ஏர்ஷாடி என்போரின் தரூபமான நடிப்பு நெஞ்சை விட்டகலாதவை. ஒரு பேரினவாதம் சிறுபான்மையினரை வருத்த மததையும் கலாச்சாரத்தையும் எப்படிப்பயன் படுத்துவார்கள் என்பது இப்படத்தின் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. இரஷ்யினரின் படையெடுப்பை எதிர்த்துப்போராடிய ஆபுகானிஸ்தானிய மக்கள் இன்று மதவாதிகாள் கொடுமையாக நடத்தப்படுவது காட்டப்பட்டிருக்கிறது. தலைவர்கள் என்று அதிகாரத்தை எடுத்துக்கொள்பவர்கள் எப்படி மததையும் கலாச்சாரத்தையும் தங்கள் நலனுக்குப் பயன் படுத்துவார்கள் என்பதை அஷீப் என்ற பாத்திரம் பிரதி பலிக்கிறது. இஸ்லாத்தின்ஸரிய மத போதனைகள் ஆபுகானிஸ்தானின் சிறுபான்மையின ஷியா மக்களைக் காப்பாற்றவில்லை.

இப்படம் எங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் கதையை ஒட்டி இருக்கிறது. நியாயம் கேட்கப்போன அமீர், மதவெறி பிடித்த தலிபான்களால் தாக்கப்படுகிறான். இன்று இலங்கையில் சிறுபான்மை மக்கள், பெரும்பான்மை அதிகாரத்தால் மனிதத்தன்மையற்று நடத்தப்படுகிறார்கள். புத்த மதபோதனைகள் புனிதமற்ற கொலைகளுக்கு உதவுகின்றன. காணாமற்போன மகனைத்தேடிப்போன தமிழ்த்தாய்ச் சிங்கள காவற்படையால் பல்முறை வன்முறைக்கும் ஆளாகிறாள். யார்வருவார் காப்பாற்ற???

feb 2008

   

 

 

 

 

Comments (3)  

Thursday, January 31, 2008
info-nool theddam

தகவல் : என்.செல்வராசா (லண்டன்)

comments  

Wednesday, January 30, 2008
kurippu- seyoganathan

எழுத்தாளர் செ.யோகநாதன் காலமானார்

 

ஈழத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான செ.யோகநாதன் தமது 66 ஆவது வயதில் நேற்றுக் காலமானார். "கலைச்செல்வி'' பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1960, 1964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழுமத்தில் அங்கம் வகித்த ஒருவர். பின்னர் தமிழக பத்திரிகைகளிலும் நிறைய எழுதியுள்ளார்.

இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி அவர் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த வேளையிலேயே வெளி வந்துவிட்டது.அதன் பின்னர் "கண்ணீர் விட்டே வளர்த்தோம்'' உட்பட தமது சிறுகதைத் தொகுதிகள் சிலவற்றை வெளியிட்டார். தமது குறுநாவல்களையும் மூன்று தொகுதிகளாக வெளியிட்டிருந்தார்.குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய அவர் அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார்.
திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குநராகவும் செயற்பட்டார்.  அவரின் குடும்பத்தார்,உறவினர்,நண்பர்கள்,  அனைவரோடும் சேர்ந்து அவர்கள் துயரில் ஊடறுவும் பங்குகொள்கிறது

செ.யோகநாதன் பற்றிய மேலதிக விபரங்கள்

செ.யோகநாதன் நூல்கள்

யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
அசோகவனம் (சிறுகதைகள், 1998)

jan 2008

comments  

Tuesday, January 29, 2008
news

நன்றி பிபிசி.கொம்

மன்னார் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் பலி

இலங்கையின் வடமேற்கே மன்னார் மடுமாதா ஆலயத்துக்கு அருகேயுள்ள தட்சனாமருதமடு என்ற பகுதியில் இன்று மதியம் 2.30 மணி அளவில் பேருந்து ஒன்று கிளேமோர் தாக்குதலுக்கு இலக்கானதில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 35 பேர் காயமடைந்துள்ளனர்.

சக்தி வாயந்த இந்த கிளோமோர் தாக்குதலின் காரணமாக பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த, அருட் சகோதரி ஒருவர், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர் 35 பேர் காயமடைந்துள்ளனர். காயப்பட்டத்தில் 9 மாணவர்களும் அடங்குவர்.

காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலை கவலைக் கிடமாக இருப்பதாகவும் இவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த மற்ற அனைவரும் பள்ளமடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் குறித்த மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_newsbulletin.shtml

நன்றி - படம் வீரகேசரி

Comment (1)  

kavithai esthar

எஸ்தர் லோகநாதன் (பேராதனை பல்கழைக்கழகம் இலங்கை)
மரணம் செதுக்கிய உயில்
 
என் மனதுள் நுழைய
முனைந்து முனைந்து என்னால்
வுpரட்டப்படாமல்
வாசலில் நிற்பவனே!!
 
உனது அன்பின் ஆழம்
மாவலி கங்கையின் நீளத்திலும்
நீளமானது
அறிவேன் நன்கு.
 
என் விழிகளில் விழிநுழைத்து
முகம் புகழ்ந்து
பருவத்தின் மீது புராணம் பாடி
பாதசுவடுகளின் மீதுலவுகிறாய்
என் செய்வேன்?
உன் மீது
பரிதாபம் மட்டுமே பட முடிகிறது
 
உலகம் நானென்கிறாய் உலக
விந்தை நானென்கிறாய்
கவிதைகளும் காட்சிகளும்
அனைத்தின்பமும் நானென்கிறாய்
எத்தனைப் பொய்!!!
 
பகலின் இரவுகளில் நாடு கடத்தப்பட்டு
காடுகளின்
சுதந்தர சிறைகளில்
மனித இயந்திரங்களாய்
இருநூறாண்டுகள்
இருளுக்குள் உழலும் மக்கள்
கூட்டத்திலிருந்து
எழுந்து வந்தவன் நீ
நினைவுகளை ஞாபகத்திற்கழை.
 
எவனெவன் வாழ்வுக்கோ உதிரம் சிந்தி
உழைத்து மரிக்கும்
அறியாமைகளுக்கு
உiiவிட்டால் ஒளிப்பிழம்பு யார்?
 
உலக விழிகளால்
மறுதலிக்கப்பட்ட் அந்த உலகம்
உன்னிடம் எதையெதையோ
பார்த்திருக்கிறது!!!
அதன்
காய்ந்து
வறண்ட தொண்டைகளில்
தாகம் ஏக்கம்
பசி கனவு!
 
விழிகளுக்கு மிக அருகாமையில்
விழித்து நிற்கும்
பொறுப்புக்கள் கடமைகள் துறந்து
மேல் வர்க்க இளைஞனாய்
வாலிபத்தை
சல்லாபத்தி விடுகிறாய்.
 
எத்தனை துயரேற்றாள்
உன் தாய் உனை ஈன்;: உனை வளர்க்க??
 
எத்தனை இடர் கடந்தார்
உன் தந்தை நீ பள்ளி செல்ல??
எத்தனை துன்பமுற்ற
மக்கள் கூட்டம் உன் மண்ணில்??
 
விருப்பமில்லா விடுமுறையில் உன்
ஏழையூர் விரைகையில்
;அம்மனிதரின் விழிகளில்
இல்லாமையும் இயலாமையும்
இணைத்திசைக்கும்
துயர கீதங்களை
கேட்டிருக்கிறாயா?
 
ஒழுகும் கூரைகளின் கீழ்
உறக்கங்களை வழிய விட்ட
இரவுகளின் அழுகையொலிகள்
எட்டியிருக்கறதா செவிகளுக்கு?
 
பசுமை அடர்ந்த உயர்ந்த மண்ணில்
தாழ்வுடைய வறண்ட வாழ்வின்
சுமைகளை
தராசிலிட்டிருக்கிறாயா?
 
இனத்தால் பொருளால்
சாதியால் நிறத்தால் விலக்கப்பட்டவர்களுக்கு
விடுதலைக்காய் முழங்கப்போகும்
குரல் யாருடையது??
 
பரம்பரையை பரிசளித்து வளர்த்த
மண்ணை மூழ்கடிக்கும்
அதிகாரங்களுக்கெதிராய்
நிமிர்வது யார்??
விடைகாணா வினாக்கள்
ஆயிரமிருக்க நீயோ…..
 
வலிமையை இளமையை
என் நடை பாதையெங்கும்
பூக்கள் விரிக்க சிந்திக் கொண்டிருக்கிறய்…
 
இளமையின் சுகிப்பை வியர்வையூரிய
கருப்பு மண்
தந்த எழுத்துக்களால் அலங்காரப்படுத்துகிறாய்.
எப்போது அவர்களின்
அழுகை தடுக்கும்
ஆயுதம் செய்ய உன் அறிவை
கருவாக்கப் போகிறாய்???
 
இங்கு உன்னையும் என்னையும்
இணைத்த இப்பெரும் அறிவாலயம்
மனிதர்களுக்கான மனிதர்களை
உரு செய்யவே உழைக்கிறது.
 
இங்கு மனிதனாவது சாதரணம்!
மனிதர்களுக்கான மனிதராவதே சாகாவரம்.
நீ
சாகாவரம் பெறு அப்போது
உன் காதல்
மறுபரிசீலனைக்குற்படலாம்!!
ஏனெனில்
நான் நம் மண்ணையும் மக்களையே
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
                         

comments  

Monday, January 28, 2008
film - criti

- சௌந்தரி (ஆஸ்திரேலியா)

கோல்யா

Kolya என்னும் இத்திரைப்படம் செக்கோஸ்லாவியா மொழியில் படமாக்கப்பட்டிருக்கின்றது. கதாநாயன் Louka வாக நடிக்கும் Zdenek Sverak என்பவரே இத்திரைப்படத்திற்கான கதை வசனத்தை எழுதியிருக்கின்றார். அவரது மகன் Jan Sverak  திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார்.  1996 ம் ஆண்டளவில் வேற்று மொழியில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிற்கான Golden Globe மற்றும் 'ஆஸ்கார்' விருதுகளை பெற்றுக்கொண்ட இத்திரைப்படத்தை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு இப்போதுதான் கிடைத்தது. நல்லனவற்றை அறியும் நிலை காலம் தாழ்த்தி கிடைத்தாலும் அதை ஓர் வரமாக ஏற்றுக்கொள்ளலாம்;.

கோல்யா (Kolya) என்ற திரைப்படம் உறவுகளின் தாக்கத்தையும் அதனால் ஏற்படும் மாற்றத்தையும் சுலபமாக புரியவைக்கின்றது.

கதாநாயகன் Louka வை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கின்றது. 55 வயதுடைய ஓர் பிரம்மச்சாரி டுழரமய. இவரைப்பற்றி சிறப்பாக
கூறவேண்டும் என்றால் திருமணமான பெண்கள் மீதும் வயலின் இனங்களில் ஒன்றான cellist என்ற வாத்தியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அரசியல் தலையீடுகளினால் கலையின்மீதான ஆர்வம் மட்டுப்படுத்தப்பட்டு மரணச்சடங்குகளின்போது மாத்திரம் இசைக் குழவினருடன் இணைந்து வாசித்துக் கொண்டிருந்தார். தன்னைப்பற்றியோ தனது எதிர்காலத்தைப் பற்றியோ கiலைப்படாது வேலை முடிந்தால் வீடு, வீட்டுக்கு வந்தவுடன் திருமணமான பெண்களின் உறவை நாடி தொலைபேசி அழைப்பு என்று அவரது வாழ்க்கை விளையாட்டாக போகின்றது.

வெறும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றினால் போதும் என்ற கொள்கையுடைய Louka வாழ்க்கையிலும் விதி விளையாடுகின்றது.
Louka ற்கு ஏற்பட்ட பணநெருக்கடியின் காரணமாக விசா பிரச்சனையிலிருது தப்புவதற்காக திருமணத்தை நாடும் ஓர் ரஷ்ய நாட்டு பெண்ணை அவளது மகனுடன் சேர்த்து பணத்திற்காக சட்டவிரோதமாக திருமணம் செய்கின்றார். திருமணம் ஆனதும் அந்தப் பெண் தனது மகனை Louka வின் பொறுப்பில் விட்டுவிட்டு நாட்டைவிட்டு போய்விடுகின்றாள். அந்தப் பையனின் பெயர்தான் Kolya

சட்டவிரோத திருமணம், அநாதரவாக நிற்கும் பையன்; Kolya அரசாங்க அதிகாரிகளின் கெடுபிடி என்று Louka வின் வாழ்க்கை சிக்கல்
நிறைந்ததாக மாறுகின்றது. திடீர்த் தந்தையாக பொறுப்பேற்ற Louka விற்கும் சிறுவன் Kolya விற்கும் இடையில் வளர்ந்து வரும்
அன்பின் இறுக்கத்தின் விளைவாக பெண்களுக்குப் பின்னால் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த Loukaன் வாழ்க்கை சிறுவன் Kolya வைச் சுற்றி பின்னப்படுகின்றது. தொடர்ந்து சிறுவனின் நலன்களை பொறுப்பாக கவனித்து அந்த சிறுவனை அரசாங்க அதிகாரிகளிடம்
சிக்கவிடாது பாதுகாத்து சிறுவனின் தாயிடம் ஒப்படைக்கின்றார். .

இங்கே யார் யாரால் காப்பாற்றப்பட்டார்கள் என்ற கேள்வி எழுகின்றது. கபடமற்ற சிறுவன் Kolya வா? அல்லது இன்று மட்டும் வாழ்ந்தால் போதும் என்று வாழ்ந்த Louka வா? 5 வயது சிறுவன் Kolya மூலம் 55 வயது Louka வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்கின்றார். அதன்பின்பு தனது பகுதிநேரக் காதலியை மனைவியாக்கி அவள் மூலம் தந்தை என்ற ஸ்தானத்தை அடைகின்றார். புதிய வாழ்க்கை புதிய பொறுப்புகள் என்று Louka தனது வாழ்க்கையின் அர்த்தத்தை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்.

ஒரு மனிதனிடம் உள்ள துன்பங்களும் சிக்கல்களும் சகமனிதர்களது உறவினால்; உண்டாகும் மகிழ்ச்சியினால் மறைந்து போய்விடுகின்றது என்பதையும் மனிதனது வாழ்தலுக்கு உறவுகளின் தேவை எவ்வளவு முக்கியம் என்பதையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றது இத்திரைப்படம். அரசியல் சாயல்கள் கதையுடன் இணைந்து வந்து கொண்டிருப்பினும் முற்றுமுழுதாக உறவுகளுக்கிடையேயான உணர்வுகளுக்கே இங்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கதாநாயகனைச் சுற்றி பலவிதமான சிக்கல்கள் நெருக்கும் வேளையிலும் இதயத்தின் கட்டளைக்கு செவிமடுக்கும் கதாநாயகனின் இயல்பு மனதில் பதிந்துவிடுகின்றது. புரியாத மொழி, வேற்று மதம், தெரியாத இனம், நீண்ட தலைமுறை இடைவெளி இவை எல்லாவற்றையும் தாண்டி அன்பின் மொழி எல்லோருக்கும் பொதுவானது என்ற கருத்து ஆழமாக சொல்லப்பட்டிருக்கின்றது.

உங்களில் பலர் இத்திரைப்படத்தை முன்பே பார்த்திருக்கக்கூடும் பார்த்தவர்கள் உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
பார்க்காதவர்கள் நேரம் கிடைக்கும்போது பார்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

 

jan 2008


comments  


Next Page


<< February 2008 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02
03 04 05 06 07 08 09
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29


ARCHIVE/உள்ளீடு
(ஆண்டு வாரியாக)






கவிஞைகள்
கவிதைகள்

 "poets-poems"


poems on other languages






book collection

வேண்டுகோள் : பெண் படைப்பாளிகள் தங்களது நூல்களை மின்நூல் வடிவில் எமக்கு அனுப்பினால் இந் நூலகத்தில் சேகரமாகும்



கமரா மொழி




இணையசாலை




பெயரிடல்








   










If you want to be updated on this weblog Enter your email here:



rss feed